Nov 20, 2026
Thisaigal NewsYouTube

பகாங் மாநிலத்தின் 2027ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டம்: 5 மில்லியன் ரிங்கிட் உபரி வருவாய் இலக்கு – 1.5 பில்லியன் ரிங்கிட் வருவாய் எதிர்பார்ப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பகாங் மாநிலத்தின் 2027ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டம்: 5 மில்லியன் ரிங்கிட் உபரி வருவாய் இலக்கு – 1.5 பில்லியன் ரிங்கிட் வருவாய் எதிர்பார்ப்பு

பகாங் மாநிலம், அடுத்த 2027ஆம் ஆண்டில் 1.507 பில்லியன் ரிங்கிட் வருவாயை ஈட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது. இதன் மூலம் 5 மில்லியன் ரிங்கிட் உபரி வருவாயைப் பதிவு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மாநில மந்திரி பெசார் வான் ரோஸ்டி வான் இஸ்மாயில், 2027ஆம் ஆண்டுக்கான மாநில வரவு செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்தபோது இதனை அறிவித்தார்.

இதில், பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களுக்காக 454.4 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், சாலைகள் மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்த 252.1 மில்லியன் ரிங்கிட்டும், வெள்ளத் தடுப்பு மற்றும் கடலோர அரிப்பைத் தடுக்கும் திட்டங்களுக்கு 19.5 மில்லியன் ரிங்கிட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.

தகுதியுள்ள பகாங் மக்களுக்கு வீட்டு வாடகை முன்பண உதவியாக 2 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், மாநிலத்தின் கடன் தொகை 3.3 பில்லியன் ரிங்கிட்டிலிருந்து 825 மில்லியன் ரிங்கிட்டாகக் குறைக்கப்பட்டுள்ளதாகவும் வான் ரோஸ்டி தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
பேராக் சுங்கை சிப்புட்டில் ஓராங் அஸ்லியை கொன்றதாக நம்பப்படும் புலி சுட்டுக் கொலை: வனவிலங்கு பாதுகாப்புத் துறை நடவடிக்கை

பேராக் சுங்கை சிப்புட்டில் ஓராங் அஸ்லியை கொன்றதாக நம்பப்படும் புலி சுட்டுக் கொலை: வனவிலங்கு பாதுகாப்புத் துறை நடவடிக்கை

சந்தானத்திற்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை

சந்தானத்திற்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை

கடற்படை பயிற்சி அதிகாரி சூசைமாணிக்கம் மரண வழக்கில் 8 ஆண்டுகளாக நீடிக்கும் விசாரணை: சாட்சிகளைத் தேடும் பணியில் போலீஸ் துறை

கடற்படை பயிற்சி அதிகாரி சூசைமாணிக்கம் மரண வழக்கில் 8 ஆண்டுகளாக நீடிக்கும் விசாரணை: சாட்சிகளைத் தேடும் பணியில் போலீஸ் துறை

நஜிப்பின் வீட்டுக் காவலுக்கு ஹன்னா யோவ் எதிர்ப்பு: மாமன்னர் உத்தரவால் கையெழுத்திட்டதாக லிம் குவான் எங் விளக்கம்

நஜிப்பின் வீட்டுக் காவலுக்கு ஹன்னா யோவ் எதிர்ப்பு: மாமன்னர் உத்தரவால் கையெழுத்திட்டதாக லிம் குவான் எங் விளக்கம்

இறுதிக் கட்டத்தில் மாரா சட்டத் திருத்தங்கள்: இவ்வாண்டிற்குள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய இலக்கு

இறுதிக் கட்டத்தில் மாரா சட்டத் திருத்தங்கள்: இவ்வாண்டிற்குள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய இலக்கு

கோலாலம்பூரில் கார் உதிரிபாகக் கிடங்கில் பயங்கர தீ: 90 விழுக்காடு சேதம்

கோலாலம்பூரில் கார் உதிரிபாகக் கிடங்கில் பயங்கர தீ: 90 விழுக்காடு சேதம்

பகாங் மாநிலத்தின் 2027ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டம்: 5 ம... | Thisaigal News