Nov 20, 2026
Thisaigal NewsYouTube

பேராக் சுங்கை சிப்புட்டில் ஓராங் அஸ்லியை கொன்றதாக நம்பப்படும் புலி சுட்டுக் கொலை: வனவிலங்கு பாதுகாப்புத் துறை நடவடிக்கை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பேராக் சுங்கை சிப்புட்டில் ஓராங் அஸ்லியை கொன்றதாக நம்பப்படும் புலி சுட்டுக் கொலை: வனவிலங்கு பாதுகாப்புத் துறை நடவடிக்கை

பேரா சுங்கை சிப்புட், கம்போங் பாவோங் பகுதியில் ஓராங் அஸ்லி ஆடவர் ஒருவரைக் கொன்றதாக நம்பப்படும் புலி, வனவிலங்கு மற்றும் தேசியப் பூங்காக்கள் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை ஙா இதாம் என்ற ஓராங் அஸ்லி ஆடவர், கிராமத்திலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் மூங்கில் சேகரித்துக் கொண்டிருந்தபோது புலியின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து, காட்டுப் பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த வனவிலங்கு அதிகாரி ஒருவரையும் அந்தப் புலி தாக்கியுள்ளது.

தற்காப்புக்காக அதிகாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் புலியின் வலது தோள்பட்டை மற்றும் கழுத்துப் பகுதியில் காயம் ஏற்பட்டது. பின்னர், தாக்குதல் நடைபெற்ற இடத்திலிருந்து சுமார் 20 மீட்டர் தொலைவில் அதன் உடல் கண்டெடுக்கப்பட்டது.

புலியின் உடலில் நடத்தப்பட்ட முதற்கட்டப் பரிசோதனையில், இடது கீழ்த்தாடைப் பகுதியில் உள்ள கோரைப்பல் ஒன்று காணாமல் போயிருந்ததுடன், மற்ற கோரைப்பற்களும் மழுங்கிய நிலையில் இருந்தது தெரியவந்துள்ளது.

தொடர்ந்து, உடற்கூறு பரிசோதனைக்காக அதன் உடல் சுங்கை தேசிய வனவிலங்கு மீட்பு மையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
பகாங் மாநிலத்தின் 2027ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டம்: 5 மில்லியன் ரிங்கிட் உபரி வருவாய் இலக்கு – 1.5 பில்லியன் ரிங்கிட் வருவாய் எதிர்பார்ப்பு

பகாங் மாநிலத்தின் 2027ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டம்: 5 மில்லியன் ரிங்கிட் உபரி வருவாய் இலக்கு – 1.5 பில்லியன் ரிங்கிட் வருவாய் எதிர்பார்ப்பு

சந்தானத்திற்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை

சந்தானத்திற்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை

கடற்படை பயிற்சி அதிகாரி சூசைமாணிக்கம் மரண வழக்கில் 8 ஆண்டுகளாக நீடிக்கும் விசாரணை: சாட்சிகளைத் தேடும் பணியில் போலீஸ் துறை

கடற்படை பயிற்சி அதிகாரி சூசைமாணிக்கம் மரண வழக்கில் 8 ஆண்டுகளாக நீடிக்கும் விசாரணை: சாட்சிகளைத் தேடும் பணியில் போலீஸ் துறை

நஜிப்பின் வீட்டுக் காவலுக்கு ஹன்னா யோவ் எதிர்ப்பு: மாமன்னர் உத்தரவால் கையெழுத்திட்டதாக லிம் குவான் எங் விளக்கம்

நஜிப்பின் வீட்டுக் காவலுக்கு ஹன்னா யோவ் எதிர்ப்பு: மாமன்னர் உத்தரவால் கையெழுத்திட்டதாக லிம் குவான் எங் விளக்கம்

இறுதிக் கட்டத்தில் மாரா சட்டத் திருத்தங்கள்: இவ்வாண்டிற்குள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய இலக்கு

இறுதிக் கட்டத்தில் மாரா சட்டத் திருத்தங்கள்: இவ்வாண்டிற்குள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய இலக்கு

கோலாலம்பூரில் கார் உதிரிபாகக் கிடங்கில் பயங்கர தீ: 90 விழுக்காடு சேதம்

கோலாலம்பூரில் கார் உதிரிபாகக் கிடங்கில் பயங்கர தீ: 90 விழுக்காடு சேதம்