Nov 20, 2026
Thisaigal NewsYouTube

சந்தானத்திற்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சந்தானத்திற்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை

கிள்ளான், ஜாலான் காப்பாரில் உள்ள பட்ஜெட் தங்கும் விடுதியில் 39 வயது பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்து, அவரிடமும் அவரது சகோதரியிடமும் ஆயுத முனையில் கொள்ளையிட்ட 53 வயது ஆடவருக்கு கிள்ளான் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.

சந்தானம் தங்கமணி என்ற அந்த நபர், கடந்த நவம்பர் 14-ஆம் தேதி அதிகாலை 5.50 மணியளவில், ஹோட்டல் அறையில் தூங்கிக் கொண்டிருந்த 39 வயதுப் பெண்ணின் அறைக்குள் அத்துமீறி நுழைந்து, திருப்புளியைக் கொண்டு மிரட்டியதாக தெரிவிக்கப்பட்டது.

பின்னர் அந்தப் பெண்ணிடம் பாலியல் பலவந்தம் புரிந்ததுடன் அருகிலிருந்த அறைக்குச் சென்று அப்பெண்ணின் சகோதரியிடமும் அத்துமீற முயன்றுள்ளார். பின்னர் அவர்கள் இருவரிடமும் மொத்தம் 900 ரிங்கிட் ரொக்கப் பணத்தையும், ஒரு கைப்பேசியையும் அந்நபர் பறித்துக் கொண்டு தப்பியோடியுள்ளார்.

முன்னதாக, கொள்ளைச் சம்பவத்தின் போது, அந்த நபர், மேல்மாடியிலிருந்து கீழே குறித்ததால் அவருக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ள நிலையில் அவர் அங்கிருந்து தப்பியுள்ளார் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சந்தானம், கிள்ளான் நீதிமன்றத்திற்கு கொண்டு வந்த போது, காலில் சிமெண்டு கட்டுடன், இரு ஊன்றுக் கோல்களின் உதவியுடன் கால் தாங்கி, தாங்கி, அவர் நீதிமன்ற வாசலை வந்தடைந்தார்.

பாலியல் வன்கொடுமை, பணம் பறித்தல் மற்றும் ஆயுதத்தை பயன்படுத்தியது ஆகிய மூன்று குற்றச்சாட்டுகளை சந்தானம் ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து அவருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
பகாங் மாநிலத்தின் 2027ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டம்: 5 மில்லியன் ரிங்கிட் உபரி வருவாய் இலக்கு – 1.5 பில்லியன் ரிங்கிட் வருவாய் எதிர்பார்ப்பு

பகாங் மாநிலத்தின் 2027ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டம்: 5 மில்லியன் ரிங்கிட் உபரி வருவாய் இலக்கு – 1.5 பில்லியன் ரிங்கிட் வருவாய் எதிர்பார்ப்பு

கடற்படை பயிற்சி அதிகாரி சூசைமாணிக்கம் மரண வழக்கில் 8 ஆண்டுகளாக நீடிக்கும் விசாரணை: சாட்சிகளைத் தேடும் பணியில் போலீஸ் துறை

கடற்படை பயிற்சி அதிகாரி சூசைமாணிக்கம் மரண வழக்கில் 8 ஆண்டுகளாக நீடிக்கும் விசாரணை: சாட்சிகளைத் தேடும் பணியில் போலீஸ் துறை

நஜிப்பின் வீட்டுக் காவலுக்கு ஹன்னா யோவ் எதிர்ப்பு: மாமன்னர் உத்தரவால் கையெழுத்திட்டதாக லிம் குவான் எங் விளக்கம்

நஜிப்பின் வீட்டுக் காவலுக்கு ஹன்னா யோவ் எதிர்ப்பு: மாமன்னர் உத்தரவால் கையெழுத்திட்டதாக லிம் குவான் எங் விளக்கம்

இறுதிக் கட்டத்தில் மாரா சட்டத் திருத்தங்கள்: இவ்வாண்டிற்குள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய இலக்கு

இறுதிக் கட்டத்தில் மாரா சட்டத் திருத்தங்கள்: இவ்வாண்டிற்குள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய இலக்கு

கோலாலம்பூரில் கார் உதிரிபாகக் கிடங்கில் பயங்கர தீ: 90 விழுக்காடு சேதம்

கோலாலம்பூரில் கார் உதிரிபாகக் கிடங்கில் பயங்கர தீ: 90 விழுக்காடு சேதம்

சிலாங்கூரில் நவம்பர் 23 முதல் கடல் நீர்மட்டம் உயர்வு: வெள்ள அபாய எச்சரிக்கை

சிலாங்கூரில் நவம்பர் 23 முதல் கடல் நீர்மட்டம் உயர்வு: வெள்ள அபாய எச்சரிக்கை