Apr 4, 2026
Thisaigal NewsYouTube
சிரம்பானில் பயங்கரத் தீ விபத்து: மாற்றுத்திறனாளிப் பெண் உடல் கருகிப் பலி
தற்போதைய செய்திகள்

சிரம்பானில் பயங்கரத் தீ விபத்து: மாற்றுத்திறனாளிப் பெண் உடல் கருகிப் பலி

Share:

நெகிரி செம்பிலான், மந்தின் பாரு பூங்காவில் உள்ள மாடி வீடொன்றில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில், 32 வயதுடைய மாற்றுத்திறனாளிப் பெண் ஒருவர் உடல் கருகிப் பலியானார்.

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு நடமாட முடியாத நிலையில் இருந்த அந்தப் பெண், தீ விபத்தின் போது வீட்டில் தனியாக உறங்கிக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது. சம்பவ இடத்தைப் பார்வையிட்ட நீலாய் சட்டமன்ற உறுப்பினர் ஜே. அருண்குமார், பாதிக்கப்பட்ட பெண்ணின் அலறல் சத்தத்தைக் கேட்டும், கதவுகள் பூட்டப்பட்டிருந்ததாலும் தீயின் வேகம் அதிகமாக இருந்ததாலும் அண்டை வீட்டாரால் அவரைக் காப்பாற்ற முடியாமல் போனது மிகுந்த வேதனையளிப்பதாகத் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுப்படுத்திய பிறகு, அந்தப் பெண்ணின் உடல் கருகிய நிலையில் மீட்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related News