அரசு ஊழியர்கள், அதிகாரப்பூர்வப் பணிகளின்போது வேஸ் செயலியைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், உள்ளூரில் உருவாக்கப்பட்ட Tuju செயலியை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது பேசிய கோபிந்த் சிங், அரசு ஊழியர்கள் கூகுள் மேப்ஸ் உள்ளிட்ட பிற வழிகாட்டிச் செயலிகளையும் பயன்படுத்தலாம் என்றார்.
வேஸ் செயலியின் சேவை விதிமுறைகள் இஸ்ரேல் சட்ட வரம்புக்கு உட்பட்டிருப்பதும், தரவுப் பாதுகாப்பு குறித்த கவலைகளுமே இந்தத் தடைக்குக் காரணம் என அவர் விளக்கினார்.
இந்தத் தடை அதிகாரப்பூர்வப் பணிகளில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், பொதுமக்களுக்குப் பொருந்தாது என்றும் கோபிந்த் சிங் டியோ தெளிவுபடுத்தினார்.








