Oct 15, 2026
Thisaigal NewsYouTube

ஆடவரை அடித்து காயப்படுத்தியதாக டத்தோஸ்ரீ உட்பட ஐவர் மீது குற்றச்சாட்டு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஆடவரை அடித்து காயப்படுத்தியதாக டத்தோஸ்ரீ உட்பட ஐவர் மீது குற்றச்சாட்டு

டிச. 30-

பிரமுகர் ஒருவரின் மகனை அடித்துக் காயப்படுத்தியதாக டத்தோஸ்ரீ அந்தஸ்தைக்கொண்ட நபர் ஒருவர், அவரின் மகள், அவரின் மருமகன் மற்றும் மேலும் இரண்டு நபர்கள் என ஐவர் மலாக்கா, ஆயர் குரோ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்

டத்தோஸ்ரீ அந்தஸ்தைக்கொண்ட நபரான 62 வயது முகமட் ஃபாஸில் ஷாபி, அவரின் 33 வயது மகள் நூர் அமலினா, 32 வயது மருமகன் அம்ரான் அஸ்மி, நிறுவனத்தின் இரண்டு பணியாளர்களான 28 வயது அஸ்ருல் ஷாபிக் ரோஸ்மான், 37 வயது அஸியான் அப்துல் ரஹிம் ஆகியோர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

கடந்த நவம்பர் மாதம் பிரமுகர் ஒருவரின் மகனான 30 வயது முகமட் நூர் ஹக்கிம் என்பவரை அடித்து காயப்படுத்தியாக டத்தோஸ்ரீ உட்பட ஐவருக்கு எதிரான குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 2 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 506 பிரிவின் கீழ் ஐவரும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்