கோலாலம்பூர், செப்டம்பர்.08-
நாட்டில் மற்ற இனங்களைப் போல் ஓராங் அஸ்லி சமூகமும் சமமான அஸ்தஸ்துடன் வாழ்வதற்கான, சட்டத் திருத்தங்களையும், புதிய அணுகுமுறைகளையும் அரசாங்கம் தொடர்ந்து மேம்படுத்தும் என துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் ஸாஹிட் ஹாமிடி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று, நியூசிலாந்து, ரோதோருவாவில் உள்ள ஓராங் அஸ்லி, Maori சமூகத்தை மேற்கோள் காட்டிப் பேசிய அவர், அம்மக்கள் பால் பண்ணை, தோட்டத் தொழில், விவசாயம் போன்றவற்றில் ஏற்றுமதி செய்யும் அளவிற்கு முன்னேறியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அதே வேளையில், மலேசியாவில் வாழும் ஓராங் அஸ்லி சமூகத்தினரின் வாழ்வாதாரங்களை மேம்படுத்துவது ‘கடவுளின் விருப்பம்’ என்றும் ஸாஹிட் ஹாமிடி குறிப்பிட்டுள்ளார்.








