Oct 13, 2026
Thisaigal NewsYouTube

கோலாலம்பூர் – காராக் நெடுஞ்சாலை, நாளை வரை போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கோலாலம்பூர் – காராக் நெடுஞ்சாலை, நாளை வரை போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம்

கோலாலம்பூர், ஏப்ரல்.05-

ஹரிராயா பொருநாளுக்காகத் தங்கள் கிராமங்களுக்குச் சென்றவர்கள், கோலாலம்பூரை நோக்கி திரும்பத் தொடங்கியிருப்பதால் கோலாலம்பூர் காராக் நெடுஞ்சாலையில் நாளை ஞாயிற்றுக்கிழமை இரவு வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகனங்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக இன்று காலை 10.40 மணி முதல் காராக்கிலிருந்து லெந்தாங் வரையில் 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது என்று மலேசிய நெடுங்சாலை வாரியமான எல்எல்எம் அறிவித்துள்ளது.

இந்த போக்குவரத்து நெரிசல், எதிர்பார்த்தது என்றாலும் நாளை இரவு வரை நீடிக்கலாம் எதிர்பார்க்கப்படுவதாக எல்எல்எம் குறிப்பிட்டுள்ளது.

எனினும் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் சற்று குறைந்துள்ளதாக அது தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →