நேற்றிரவு கிளாந்தான், பாசிர் பூத்தேயில் உள்ள கம்போங் வாக்காஃப் பெராங்ஙான் நடந்த சம்பவத்தில் முகமூடி அணிந்த இருவரால் பலமுறை வெட்டப்பட்டதில் 55 பயதுடைய ஆடவர் ஒருவர் பலத்த காயங்களுக்கு இலக்கானார்.
அந்த ஆடவர் தமது நண்பருடன் உணவகத்தில் இருந்த போது அடையாளம் தெரியாத இருவரால் பாராங்கத்தியால் சரமாரியாக வெட்டப்பட்ட சம்பவம் குறித்து தமது தரப்புக்கு இரவு 10.30 மணி அளவில் தகவல் கிடைத்ததாக பாசிர் பூத்தே காவல் துறை தலைவர் சைசுல் ரிசால் சகாரியா தெரிவித்தார்.
தாக்கிய பிறகு சாம்பல் நிற ப்ரோத்தோன் சாகா காரில் அந்த இருஅரும் தப்பிச் சென்றதாகவும் ஏற்கெனவே அந்தக் காரில் மூன்றாவது நபர் ஒருவர் இருந்ததாகவும் நம்பப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
அவசர முதலுதவிக்காக பாசீர் பூத்தே தெங்கு அனிஸ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் பின்னர் கூபாங் கிரியானில் உள்ள மலேசிய அறிவியல் பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் சைசுல் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் குறித்த விசாரணையை குற்றவியல் சட்டம் 326இன்படி மேற்கொள்வதாக சைசுல் மேலும் சொன்னார்.








