2024 கல்வியாண்டையொட்டி மாணவர்களுக்கு முன்கூட்டியே வழங்கப்படும் அரசாங்க உதவித் தொகை ஜனவரி மாதம் அவர்களின் வங்கி கணக்கில் சேர்க்கப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
நாடு தழுவிய நிலையில் 52 லட்சத்து 54 ஆயிரத்து 200 மாணவர்கள் இந்த உதவித்தொகையை பெறுவதற்கு தகுதி பெற்றுள்ளனர் என்று கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்த உதவித் திட்டத்தில் ஒவ்வொரு மாணவரும் தலா 150 வெள்ளியை பெறுவதற்கு தகுதி பெற்றுள்ளதாக அது தெரிவித்துள்ளது.








