Oct 9, 2026
Thisaigal NewsYouTube

முதலைத் தாக்கி ஆடவர் உயிரிழந்தார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
முதலைத் தாக்கி ஆடவர் உயிரிழந்தார்

கூச்சிங், ஜூன்.28-

முதலையால் கடித்து குதறப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படும் ஆடவரின் சடலம், சரவாக், கூச்சிங், ஜாலான் மாத்தாங், சுங்கை மாவோங் ஆற்றில் நேற்றிரவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 32 வயதுடைய அந்த ஆடவர், ஆற்றில் மீன் பிடிக்கும் போது, காணாமல் போன நிலையில் அவரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. இந்நிலையில் அந்த ஆடவரின் சடலம், ஆற்றின் கரையோர சேற்றில் செருகிக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

சவப் பரிசோதனைக்காகச் சடலம், சரவாக் பொது மருத்துவமனையின் சவக் கிடங்கிற்குக் கொண்டுச் செல்லப்பட்டுள்ளதாக படாவான் மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் இர்வான் ஹாஃபிஸ் முகமட் ராட்ஸி தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →