Oct 16, 2026
Thisaigal NewsYouTube

2,337 இளைஞர்கள் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டதாக கூறினார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
2,337 இளைஞர்கள் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டதாக கூறினார்

டிச. 15-

நாட்டில் இளைஞர்களிடையே ஊழல் நடவடிக்கைகள் தீவிரமாக இருப்பதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. ஆணையத்தின் துணைத் தலைவர் Datuk Azmi Kamaruzaman கூறுகையில், கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் ஐந்து ஆண்டுகளில் 16 முதல் 40 வயதுக்குட்பட்ட 2,337 இளைஞர்கள் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டதாக கூறினார்.

ஆணையத்தின் புள்ளிவிவரங்களின்படி, இளைஞர்கள் செய்யும் குற்றங்களில் கையூட்டு வாங்குதல், கொடுத்தல், பொய் சொல்லுதல், பதவி - அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துதல் , கள்ளப்பணம் மாற்றுதல் போன்றவையும் அடங்கும். பதிவு செய்யப்பட்ட 1,073 குற்றச்சாட்டுகளில் 575 பேர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டனர். இது நம் வாழ்வில் இயல்பான ஒன்றாக மாறாமல் தடுக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், இளைஞர்கள், குறிப்பாக எதிர்காலத்தில் நாட்டை நிர்வகிக்கும் உயர்கல்வி நிறுவன மாணவர்கள் ஊழலை ஒழிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். இளைஞர்கள் தங்கள் நேர்மையை வலுப்படுத்தி ஊழலுக்கு எதிராக உறுதியாக இருக்க வேண்டும் என்றார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →