குளுவாங், அக்டோபர்.27-
அண்மையில் உணவகம் ஒன்றில் புகைப்பிடித்த போலீஸ்காரர் ஒருவர் மீது ஒழங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று குளுவாங் மாவட்ட போலீஸ் தலைவர் பாஹ்ரேன் முகமட் நோ அறிவித்துள்ளார்.
உணவகத்தில் புகைப்பிடிப்பதற்குத் தடை விதிக்கப்பட்ட நிலையிலும் அந்த போலீஸ்காரர் ஒழுங்கு மீறியதன் விளைவாக அவர் கட்டொழுங்கு நடவடிக்கைக்கு ஆளாகியுள்ளார் என்று பாஹ்ரேன் குறிப்பிட்டார்.
அண்மையில் குளுவாங், தாமான் தாசேக் இண்டாவில் உள்ள ஓர் உணவகத்தில் போலீஸ்காரர் ஒருவர் புகை பிடித்துக் கொண்டிருந்த காட்சி, சமூக வலைத்தளங்களில் வைரலானதுடன் அவர் கடும் விமர்சனங்களுக்கு ஆனானார்.








