Oct 13, 2026
Thisaigal NewsYouTube

அவதூறுகள் பரப்பப்படுவதை உடனடியாக நிறுத்துங்கள் - பத்து எம்.பி. பிரபாகரன் கோரிக்கை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
அவதூறுகள் பரப்பப்படுவதை உடனடியாக நிறுத்துங்கள் - பத்து எம்.பி. பிரபாகரன் கோரிக்கை

கோலாலம்பூர், மார்ச்.25-

கோலாலம்பூர், ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவில் வீற்றிருக்கும் கோவில் பிரச்னை தொடர்பாக அவதூறுகளையும், உண்மைக்குப் புறம்பான தகவல்களையும், பரப்பி வரும் பொறுப்பற்ற தரப்பினர், தங்கள் செயலை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று பத்து எம்.பி. P. பிரபாகரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆலய விவகாரத்தை அமைதியான முறையில் தீர்த்துக் கொள்வதற்கு, கோயில் நிர்வாகத்துடனும், கட்டுமான நிறுவனத்துடனும் பேச்சுவார்த்தை நடத்த அரசாங்கத்திற்கு சற்று கால அவகாசம் வழங்குமாறு பிரபாகரன் வலியுறுத்தினார்.

அதே வேளையில் இந்த ஆலய விவகாரம் தொடர்பாக சில உண்மைகளையும் பகிர்த்து கொள்ளத் தாம் விரும்புவதாக பிரபாகரன் தெரிவித்தார்.

கோலாலம்பூர், கூட்டரசு பிரதேசத்தில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் கடந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து இந்தப் பிரச்சினையில் நான் நேரடியாக ஈடுபட்டுள்ளேன்.

ஆலயத்தின் தற்போதைய நிலமான கோவில் நிலம் லாட் 328 -க்கு கடந்த 2008 ஆம் ஆண்டில் கோலாலம்பூர் மாநகர் மன்றமான டிபிகேஎல் தரப்பினரால் மாற்றப்பட்டது என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

2008 ஆம் ஆண்டு டிபிகேஎல் தரப்பினரால் திட்டமிடப்பட்ட ஒரு மேம்பாட்டுத் திட்டத்தின் காரணமாக, அப்போதைய அரசாங்கத்தின் வேண்டுகோளின் பேரில் கோயில் இடமாற்றம் செய்யப்பட்டது.

ஊராட்சி மன்றத்தினால், குறிப்பாக டிபிகேஎலிலிருந்து தேவையான அனைத்து அனுமதிகளையும் பெற்ற பிறகு, கோயிலின் புதிய தளமான லாட் 328 , செக்‌ஷன் 40, ஜாலான் பூனுஸ் எனாம், ஒப் ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவுக்கு இடம் பெயர்ந்தது.

கோவில் இடம் மாற்றப்பட்ட 328 ஆவது லாட் நிலத்தை அரசாங்கப் பதிவேட்டில் Gazzett- ( கேசட் ) செய்வதற்கு கோவில் நிர்வாகம் , கடந்த 2012 ஆம் ஆண்டில் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டன. ஆனால் தோல்வியடைந்தன.

எனினும் கோவில் வீற்றிருக்கும் லாட் எண் 328 ஆவது நிலத்தை, 2014 ஆம் ஆண்டில் ஒரு மேம்பாட்டாளர் நிறுவனத்திற்கு டிபிகேஎல், விற்றுவிட்டது. இதுதான் நடந்த உண்மை.

எனவே கோவில் தொடர்பாக அவதூறுகளையும், தவறான தகவல்களையும் பரப்பி வரும் தரப்பினர், தங்கள் செயலை உடடினயாக நிறுத்திக் கொண்டு, இவ்விவகாரம் சுமூகமாக தீர்வு காண்பதற்கு வழிவிட வேண்டும் என்று பத்து எம்.பி. பிரபாகரன் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் கேட்டுக் கொண்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
நாட்டைப் பாதிக்கும் புகைமூட்டம்: தேசிய நெருக்கடியாக விவாதிக்க நாடாளுமன்றம் ஒப்புதல்

நாட்டைப் பாதிக்கும் புகைமூட்டம்: தேசிய நெருக்கடியாக விவாதிக்க நாடாளுமன்றம் ஒப்புதல்

டோல் சாவடிகளில் நிற்காமல் பயணிக்கும் முறை! செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தத் திட்டம்

டோல் சாவடிகளில் நிற்காமல் பயணிக்கும் முறை! செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தத் திட்டம்

அடுத்த ஆண்டு 41 டிகிரி செல்சியஸைக் கடக்குமா வெப்பநிலை? ‘சூப்பர் எல் நினோ’ குறித்து எச்சரிக்கை

அடுத்த ஆண்டு 41 டிகிரி செல்சியஸைக் கடக்குமா வெப்பநிலை? ‘சூப்பர் எல் நினோ’ குறித்து எச்சரிக்கை

மைஇஜி, ஸெட்ரிக்ஸ் நிறுவனங்களின் 31.4 கோடி ரிங்கிட் நிலுவை! எம்ஏசிசி, போலீஸ் இணைந்து விசாரணை

மைஇஜி, ஸெட்ரிக்ஸ் நிறுவனங்களின் 31.4 கோடி ரிங்கிட் நிலுவை! எம்ஏசிசி, போலீஸ் இணைந்து விசாரணை

இந்தியப் போலீஸ் அதிகாரிகளாக ஆள்மாறாட்டம் செய்து மோசடி! கூலிமில் 53 பேர் கைது; 73 பேர் பாதிப்பு

இந்தியப் போலீஸ் அதிகாரிகளாக ஆள்மாறாட்டம் செய்து மோசடி! கூலிமில் 53 பேர் கைது; 73 பேர் பாதிப்பு

வேலை இழப்போருக்கு இஐஎஸ் திட்டத்தில் 6 மாதங்கள் வரை நிதியுதவி: பொருளாதார அமைச்சு தகவல்

வேலை இழப்போருக்கு இஐஎஸ் திட்டத்தில் 6 மாதங்கள் வரை நிதியுதவி: பொருளாதார அமைச்சு தகவல்