ஷா ஆலாம், ஜூலை.16-
தன்முனைப்புப் பயிற்சி என்ற போர்வையில் ஆபாச நடனங்களுக்கு வித்திடப்பட்டதாகக் கூறப்படும் இஹாத்தி கும்பலைச் சேர்ந்த கணவன் மனைவி உட்பட அறுவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
அந்த அறுவரும், இன்று ஷா ஆலாம் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் அமீரா மஸ்தூரா காமிஸ் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, அவர்களை வரும் வெள்ளிக்கிழமை வரை தடுத்து வைப்பதற்கான அனுமதியைப் போலீசார் பெற்றனர்.
26 க்கும் 47 க்கும் இடைப்பட்ட வயதுடைய இந்த அறுவரும் குடும்ப மேன்மை என்ற பெயரில் தன்முனைப்புப் பயிற்சி நடத்தி, அங்கு ஒழுக்கக்கேடானச் செயலுக்கு வழிவகுத்ததாகக் கூறப்படுகிறது.
அந்த அறுவரில் நால்வர் ஆண்கள் என்றும் இருவர் பெண்கள் என்றும் அடையாளம் கூறப்பட்டது.








