புத்ராஜெயா, நவம்பர்.07-
முன்னாள் மாடல் அழகியான அல்தான்துயா ஷாரிபு கொலை தொடர்பில் அவரின் குடும்பத்தினருக்கு அரசாங்கமும், அரசியல் ஆய்வாளர் அப்துல் ரசாக் பஹிண்டாவும் 5 மில்லியன் ரிங்கிட்டை இழப்பீடாக வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து செய்து கொள்ளப்பட்ட மேல்முறையீட்டில் வரும் ஜனவரி 20 ஆம் தேதி அப்பீல் நீதிமன்றம் தீர்ப்பளிக்கவிருக்கிறது.
நவம்பர் 4 ஆம் தேதி அப்பீல் நீதிமன்ற துணை பதிவதிகாரி மரியாம் ஹசானா ஒத்மான் முன்னிலையில் வழக்கின் சிக்கலை அகற்றும் விவாதம் நடைபெற்ற போது தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட்டதாக அப்துல் ரசாக் பஹிண்டாவின் வழக்கறிஞர் ஆப்ரஹாம் அவ் தெரிவித்தார்.
உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து அரசாங்கமும், அப்துல் ரசாக் பஹிண்டாவும் அப்பீல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.








