கடந்த 15 வருட பக்காத்தான் ஹரப்பான் கூட்டணி ஆட்சியின் காலக் கட்டத்தில், பினாங்கு மாநிலத்தில் எந்தவொரு மாற்றமும் இல்லை என கெராக்கன் கட்சியின் தலைவர் டத்தோ டாக்டர் டொமினிக் லாவ் ஹோ சாய்அக்கூட்டணியைச் சாடியுள்ளார்.
பினாங்கு மாநில மந்திரி பெசார் வகுத்த பினாங்கு போக்குவரத்து திட்டங்கள் எதுவும் செயல்படுத்தபட வில்லை எனவும் கடலுக்கடியில் சுரங்கப்பாதை கட்டும் திட்டமும் அப்படியே முடங்கி உள்ளது என சுட்டிக்காட்டினார்.
பாக்காத்தான் ஹரப்பான் கூட்டணி வெறும் வாய் வார்த்தை வழியாக மக்களுக்கு வாக்குகள் தருகின்றார்களே தவிர இந்த 15 வருட கால ஆட்சியில் அந்த மாநிலத்தில் எந்தவொரு மாற்றமும் நிகழவில்லை என டொமினிக் லாவ் தெரிவித்தார்.








