புத்ராஜெயா, செப்டம்பர்.10-
கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு, பெசுட் மாவட்ட முன்னாள் போலீஸ் தலைவரின் வலது கை விரலை வெட்டிய நபருக்கு விதிக்கப்பட்ட 7 ஆண்டு சிறைத் தண்டனையை புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றம் இன்று நிலை நிறுத்தியது.
39 வயது முகமட் நஸ்லி முகமட் நாசீர் என்ற அந்த நபர், தனக்கு எதிரான தண்டனை, குறைக்கப்பட வேண்டும் என்று செய்து கொண்ட மேல்முறையீட்டு மனுவை மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவினருக்கு தலைமையேற்ற நீதிபதி சே முகமட் ருஸிமா கஸாலி நிராகரித்தார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பெசுட் மாவட்ட போலீஸ் தலைவராக ஏசிபி முகமட் ஸம்ரி முகமட் ரோவி பதவி வகித்த போது, அவரின் விரலைத் துண்டித்தக் குற்றத்திற்காக அந்த நபருக்கு தண்டனை விதிக்கப்பட்டது.








