Oct 17, 2026
Thisaigal NewsYouTube

கணினிக்குள் போதைப்பொருள், மலேசியர் கைது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கணினிக்குள் போதைப்பொருள், மலேசியர் கைது

கோலாலம்பூர், நவ.6-


கணினிக்குள் சுமார் 100 கிலோ எடைக்கொண்ட போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த மலேசியர் ஒருவரை, ஆஸ்திரேலிய போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த அக்டோபர் 16 ஆம் தேதி மலேசியாவிலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு சென்ற 45 வயது மதிக்கத்தக்க அந்த மலேசியர், விமான சரக்குப்பிரிவில் தாம் கொண்டு வந்த கணினிக்குள் பெரியளவில் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்தது போலீசாரால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது

அந்தப் போதைப்பொருளை அக்டோர்பர் 30 ஆம் தேதி ஆஸ்திரேலிய, தென் சிட்டியில் உள்ள கிங்ஸ்குரோவ் என்ற இடத்திற்கு அனுப்புவதற்கு அந்த மலேசியர் திட்டமிட்டு இருந்தது போலீசாரின் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் ஆயுள் தண்டனை விதிக்க வகை செய்யும் போதைப்பொருள் சட்டத்தின் கீழ் அந்த மலேசியர், கடந்த அக்டோர் 31 ஆம் தேதி ஆஸ்திரேலிய நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார் என்று AFP செய்தி நிறுவனத்தின் தகவல்கள் கூறுகின்றன.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →