வெளிநாடுகளில் காணாமல் போனதாக கூறப்படும் மலேசியர்களை கண்டு பிடிப்பதிலும், அவர்களை தாயகத்திற்கு கொண்டு வருவதிலும் மலேசிய அரசாங்கம் தொடர்ந்து உறுதி பூண்டுள்ளதாக வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் ஹசன் தெரிவித்துள்ளார்.
எனினும் வெளிநாடுகளில் அவ்வாறு காணாமல் போன மலேசியர்கள் , எங்கே இருக்கிறார்கள் என்பது குறித்து அறவே தெரியவில்லை என்றால், அப்படி பட்டவர்களை தேடிக் கண்டு பிடிப்பது என்பது வெளியுறவு அமைச்சுக்கு மிக சிரமமாகும் என்று என்று அவர் குறிப்பிட்டார்.
நாடுகளுக்கு இடையில் அரச தந்திர உறவை பேணுவதிலும், வெளிநாடுகளில் உள்ள மலேசியர்களை நலனை பாதுகாப்பதிலும், அவர்களை நிர்வகிப்பதிலும் விஸ்மா புத்ராவின் முதன்மை கடமையாக இருந்து வருகிறது என்று முகமட் ஹசான் குறிப்பிட்டார்.
வெளிநாடுகளுக்கு செல்கின்ற மலேசியர்கள், குறைந்த பட்சம் அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதை அவர்களின் குடும்பத்தினர் அறிந்திருக்க வேண்டும். அவ்வாறு அறிந்திருக்கும் பட்சத்தில் அவர்களுடன் தொடர்பு கொள்ள இயலவில்லை என்றால் அவர்கள் இருக்கின்ற இடத்தை தேடிக் கண்டுப்பிடிப்பதில் விஸ்மா புத்ரா உதவ முடியும் என்று அமைச்சர் விளக்கினார்.
அமெரிக்காவில் தென்மேற்கு மாநிலமான லூயிசினா பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்தப் பின்னர் 36 ஆண்டுகளாக காணவில்லை என்றும், தனது மகனை தேடிக் கண்டுபிடிப்பதில் பொது மக்கள் உதவ வேண்டும் என்றும் ஜோகூர், கூலாய்- ஐ சேர்ந்த 77 வயது தாயார் ஒருவர் மிக உருக்கமான வேண்டுகோளை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருப்பது தொடர்பில் கருத்துரைக்கையில் முகமட் ஹசான் மேற்கண்டவாறு கூறினார்.
வெளிநாட்டில் உள்ள மலேசியர்கள், எந்த நாட்டில் வசிக்கிறார்களோ, அந்த நாட்டில் உள்ள மலேசியத் தூதரகத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளுவார்களோயானல் இதுபோன்ற சிக்கல்கள் ஏற்படுவது தவிர்க்கப்படலாம் என்று அமைச்சர் அறிவுறுத்தினார்.








