கோத்தா திங்கி, அக்டோபர்.11-
ஜோகூர், கோத்தா திங்கியில் இரண்டு வாகனங்கள், நேருக்கு நேர் மோதிக் கொண்டு , தீப்பற்றிக் கொண்ட சம்பவத்தில் ஐவர் உயிர் தப்பியதாகக் கூறப்பட்ட போதிலும், அதில் மூவர் உயிரிழந்துள்ளனர். இருவர் படுகாயத்திற்கு ஆளாகியுள்ளனர் என்பது அம்பலமாகியுள்ளது.
இன்று காலை 11.25 மணியளவில் ஜோகூர், கோத்தா திங்கி, செனாய்- டெசாரு சாலையின் 56 ஆவது கிலோமீட்டரில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் சிகரெட் கடத்தலில் ஈடுபட்ட Toyota Fortuner ரக வாகனம் ஒன்றும் சம்பந்தப்பட்டுள்ளதாக கோத்தா திங்கி மாவட்ட போலீஸ் தலைவர் யுசோஃப் ஒத்மான் தெரிவித்தார்.
தற்போது இந்த விவகாரம் மாவட்ட குற்றப்புலனாய்வுத்துறை போலீசாரால் விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார். அந்த வாகனத்தை உள்ளூரை சேர்ந்த 32 வயது நபர் செலுத்திய வேளையில் எதிரே மோதப்பட்ட Honda CR-V ரக வாகனத்தை 25 வயது பெண் செலுத்தியுள்ளார் என்று அவர் மேலும் கூறினார்.








