அலோர் ஸ்டார், நவம்பர்.06-
கூலிம், தாமான் பேராவில், கடந்த செவ்வாய்க்கிழமை, தனது தாயாரால் தூக்கிலிடப்பட்டு, உயிர் தப்பிய 7 வயது சிறுவனைப் பராமரிக்க அவரது தந்தை ஒப்புக் கொண்டுள்ளார்.
கூலிம் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வரும் அச்சிறுவன், சிகிச்சைக்குப் பின்னர் அவரது தந்தையிடம் ஒப்படைக்கப்படுவார் என்று கெடா மாநில நல்வாழ்வு, மகளிர், குடும்பம், சமூகம் மற்றும் ஒற்றுமைக் குழுவின் தலைவர் டத்தோ ஹலிமாத்தோன் ஷாடியா சாஆட் தெரிவித்துள்ளார்.
அச்சிறுவன் தந்தையிடம் ஒப்படைக்கப்பட்ட பிறகு, அவரது நல்வாழ்வை உறுதிப்படுத்த, மாநில சமூக நல அதிகாரிகள் அவரது வீட்டிற்குச் சென்று பார்வையிடுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.








