May 5, 2026
Thisaigal NewsYouTube
அத்துமீறி நுழைந்ததாக டெங்கில் ஆலயத் தலைவர் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

அத்துமீறி நுழைந்ததாக டெங்கில் ஆலயத் தலைவர் மீது குற்றச்சாட்டு

Share:

சிப்பாங், பிப்ரவரி.09-

கடந்த ஆண்டு டெங்கில், Jalan Selangor Dredging- கில் உள்ள ஒரு தனியார் நிலத்தில் அத்துமீறி நுழைந்ததாகக் கூறப்படும் புகாரில், ஓர் ஆலயத்தின் தலைவர் இன்று சிப்பாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.

டெங்கில், Jalan Selangor Dredging கிராமத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயத் தலைவரான 49 வயது எம். பரமகுரு, மாஜிஸ்திரேட் கைராதுல் அனிமா ஜெலானி முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

எனினும், பரமகுரு, தன் மீதான குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரியுள்ளார்.

பாதுகாவலராக பணி புரியும் பரமகுரு, கடந்த ஆண்டு ஜூன் 19-ஆம் தேதி மாலை 4.45 மணியளவில், சுஹைலி அகமது என்பவருக்குச் சொந்தமான நிலத்தில் அனுமதி இன்றி அத்துமீறி நுழைந்ததாகப் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

இவ்வழக்கு மீதான அடுத்த விசாரணை நடைபெறும் வரையில் பரமகுருவை ஒரு நபர் உத்தரவாதத்துடன் 4 ஆயிரம் ரிங்கிட் ஜாமீனில் விடுவிக்க நீதிமன்றம் அனுமதித்தது.

Related News