காஜாங்கைச் சேர்ந்த பிரபல வர்த்தகரும், மருத்துவருமான டாக்டர் முகமட் உஸ்மான் சான் பட்சானை படுகொலை செய்ததாக, இரு இந்திய நபர்கள் காஜாங் மாஜீஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.
41 வயது டாக்டர் ஊஸ்மானை கொலை செய்து, சடலத்தைப் பயணப் பெட்டிக்குள் அடைத்து, ஔலு லங்காட்டில் 27 மீட்டர் உயரத்திலிருந்து ஒரு பள்ளத்தாக்கில் வீசியதாக இ-ஹைலிங் ஓட்டுநரான 41 வயது ஜே.டேவன் மற்றும் 22 வயதுஎஸ். ஹரிஹரன் ஆகியோர் மீது கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
மாஜீஸ்திரேட் நிக் சிதி னொரஸ்லினா முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது டேவனும்னும், ஹரிஹரனனும் குற்றச்சாட்டின் தன்மையைப் புரிந்து கொள்வதற்கு அடையாளமாக தலையாட்டினர்.
இவ்விரு நபர்களும், கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதிக்கும் ஏப்ரல் 28 ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில், காஜாங், உலு லங்காட், பத்து 14, சுங்கை தேகாலி அருகில் உள்ள ஒரு பள்ளத்தாக்கில் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கடும் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் இருவரும் கொலைக் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.
பிணைப் பணம் கோரி கடத்தப்பட்டதாக கூறப்படும் டாக்டர் உஸ்மான், காஜாங், கோலாலம்பூர் புக்கிட் பிந்தாங், பங்சார், பினாங்கு மற்றும் நெகிரி செம்பிலான் ஆகிய பகுதிகளில் தமது சொந்த கிளினிக்கை நடத்தி வந்துள்ளார்.
Wisconsin - Madison பல்கலைக்கழகத்தில் உயிரியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றவரான ஒரு இந்து முஸ்லிமான டாக்டர் உஸ்மான், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவிலிருந்து தாயகம் திரும்பி, மருத்துவத்துறையில் ஈடுப்பட்டார்.
டாக்டர் உஸ்மான் மின்சாரக் கம்பினால் கழுத்து இறுக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று பத்திரிகை தகவல்கள் கூறுகின்றன.

Related News

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்

அந்த இந்தியப் பிரஜையின் முன்னாள் முதலாளியை ஆள்பல இலாகா விசாரணை நடத்தும்


