Dec 4, 2025
Thisaigal NewsYouTube
கோவில் நிகழ்ச்சியின் போது துப்பாக்கி வேட்டைக் கிளப்பிய நபர் கைது
தற்போதைய செய்திகள்

கோவில் நிகழ்ச்சியின் போது துப்பாக்கி வேட்டைக் கிளப்பிய நபர் கைது

Share:

கோல சிலாங்கூர், செப்டம்பர்.02-

கோல சிலாங்கூர், பெஸ்தாரி ஜெயா, புக்கிட் பாடோங் தோட்டத்தில் உள்ள ஒரு கோவிலில் நடைபெற்ற திருவிழாவின் போது, ஆகாயத்தை நோக்கித் துப்பாக்கி வேட்டை கிளப்பிய நபரைப் போலீசார் கைது செய்தனர்.

நேற்று திங்கட்கிழமை நிகழ்ந்த இந்தச் சம்பவம் தொடர்பில் சிலாங்கூர் மாநில போலீஸ் தலைமையகத்தின் D9 பிரிவு, கோல சிலாங்கூர் குற்றப் புலனாய்வுத்துறை போலீஸ் பிரிவு மேற்கொண்ட தேடுதல் வேட்டையில் அந்த நபர் நேற்றிரவு 8 மணியளவில் பெட்டாலிங் ஜெயாவில் கைது செய்யப்பட்டார். 55 வயதுடைய அந்த நபர் விசாரணைக்கு ஏதுவாக மூன்று நாள் தடுத்து வைக்கப்படுவதற்கு போலீசார் நீதிமன்ற ஆணையைப் பெற்றுள்ளனர் என்று கோல சிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிண்டெண்டன் அஸாஹாருடின் தஜுடின் தெரிவித்தார்.

கோவிலுக்கு அருகில் பிற்பகல் 3.50 மணியளவில் அந்த நபர், வானை நோக்கித் துப்பாக்கி வேட்டை கிளப்பிய காட்சியைக் கொண்ட காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து இது தொடர்பாக போலீஸ் புகார் பெறப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

Related News