Mar 11, 2026
Thisaigal NewsYouTube
பாலஸ்​தீன ஒற்று​மை வாரத்தை சரவா பள்ளிகள் கடைப்பிடிப்பது கட்டாயமில்லை
தற்போதைய செய்திகள்

பாலஸ்​தீன ஒற்று​மை வாரத்தை சரவா பள்ளிகள் கடைப்பிடிப்பது கட்டாயமில்லை

Share:

இஸ்ரேலுக்கும், பாலஸ்​தீனத்திற்கும் இடையில் ஏற்பட்டுள்ள அனைத்துலக நெருக்கடி விவகாரத்தில் மலேசியாவில் உள்ள பள்ளி மாணவர்களை கல்வி அமைச்சு சம்பந்தப்படுத்தக்கூடாது என்பதே சரவா மாநில டிஏபியின் நிலைப்பாடாகும் என்று அம்மாநில டிஏபி தலைவர் சொங் சியெங் ஜென் திட்டவட்டமாக தெரி​வித்துள்ளார்.

பள்ளி மாணவர்கள், சிறு குழந்தைகள். வெளியுலக விவகாரத்தை இன்னும் அறிந்திராத பருவத்தில் உள்ளவர்கள். படிப்பு என்றால் என்ன என்பதை இப்போதுதான் கற்கத் தொடங்கியுள்ள அவர்களை பாலஸ்​தீனத்திற்கு, மனிதாபிமான ஆதரவை தெரிவிக்க ஒற்றுமை வாரத்தை நடத்துமாறு அறிவுறுத்துவது ஏற்புடைய செயல் அல்ல என்று சொங் சியெங் ஜென் தெரிவித்தார்.

சவராக்கில் உள்ள பள்ளிகளில் பாலஸ்​தீன ஒற்றுமை வாரத்தை கடைப்பிடிப்பது கட்டாயமில்லை என்பதை சரவா மாநில பக்காத்தான் ஹராப்பான் தலைவருமான சொங் சியெங் ஜென் குறிப்பிட்டார்.

இதனை துணை கல்வி அமைச்சர் லிம் ஹுய் யிங்கும் உறுதி படுத்தியுள்ளதையும் சொங் சியெங் ஜென் சுட்டிக்காட்டினார்.

பாலஸ்​தீன மக்களுக்கு ஆதரவு நல்கும் வகையில் ஒற்றுமை வார​த்தை கடைப்பிடித்து, பாலஸ்​தீனத்திற்கு ஆதரவாக நிக​ழ்ச்சிகளை நடத்துமாறு நாடு முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு கல்வி அமைச்சு ஓர் சுற்றறிக்கையின் வாயிலாக உத்தரவிட்டு இருப்பது சரவா மாநிலத்தில் உள்ள அனைத்து நிலைகளிலும் உள்ள மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளதாக சொங் சியெங் ஜென் தெரிவித்தார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு