கோத்தா பாரு, ஜூலை.20-
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமைப் பதவியிறக்கம் செய்வதற்கு வரும் ஜுலை 26 ஆம் தேதி பேரணி ஒன்று கோலாலம்பூரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வேளையில் அன்வாரின் நிர்வாகம் தொடரடப்பட வேண்டும் என்று கிளந்தான் உலாமா வலியுறுத்தியுள்ளார்.
அன்வாரின் நிர்வாகம் எந்தவோர் இடையூறின்றி செயல்பட வேண்டும் என்று கிளந்தான் ஜாபா போண்டோக்கைச் சேர்ந்த ஷையிக் வாஸிர் சே அவாங் அல்-மக்கி கருத்து தெரிவித்துள்ளார்.
அன்வாரின் நிர்வாகம் நாட்டைச் சிறப்பாகப் பராமரிக்கப்பட முடியும். இது இஸ்லாத்தின் வளர்ச்சி, பொருளாதாரத்தில் எந்த தாக்கத்தையும் தவிர்க்கும் என்று அந்த உலாமா கருத்துரைத்துத் தெரிவித்துள்ளார்.








