Oct 10, 2026
Thisaigal NewsYouTube

2 சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட மூவர் மீது குற்றஞ்சாட்டப்படும்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
2 சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட மூவர் மீது குற்றஞ்சாட்டப்படும்

கோத்தா கினபாலு, ஜூன்.18-

சபா சட்டமன்ற உறுப்பினர்கள் மத்தியில் மிகப் பெரிய ஊழல் நடந்து இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட மூவர் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவர் என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம்மின் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்துள்ளார்.

இந்த ஊழல் தொடர்பான விசாரணை முடிவடைந்து விட்டது. இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட மூவரும் இம்மாதத்தில் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவர் என்று அஸாம் பாக்கி விளக்கினார்.

சபா மாநில குத்தகைகள் தொடர்பில் சட்டமன்ற உறுப்பினர்கள் பகிரங்கமாக லஞ்சம் கேட்டு, பேரம் பேசிய உரையாடல் தொடர்பான ஆடியோ பதிவு அம்பலமானதைத் தொடர்ந்து எஸ்பிஆர்எம் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →