கோலாலம்பூர், செப்டம்பர்.29-
பகடிவதை குறித்து தகவல் அளிப்பதற்கு சட்ட விவகாரப் பிரிவினால் ஏற்படுத்தப்பட்ட பிரத்தியேக ஓன் லைன் தொடர்பு முறையில், தகவல் அளிப்பவர்களின் விவரங்கள் ரகசியம் காக்கப்படும் என்று அரசாங்கம் இன்று உத்தரவாதம் அளித்துள்ளது.
பகடிவதைச் சம்பவங்கள் குறித்து எந்தவொரு தரப்பினரும் தகவல் அளித்து உதவலாம். அவர்களின் விவரங்கள் ரகசியம் காக்கப்படும் என்று சட்ட சீர்திருத்தங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அஸாலினா ஒத்மான் தெரிவித்தார்.
ஒன்லைனின் தகவல் கிடைத்த அடுத்த நிமிடமே தகவல் அளித்தவரின் விவரங்கள் பாதுகாக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் முதலில் உறுதிச் செய்யப்படும் என்ற இன்று கோலாலம்பூரில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அஸாலினா மேற்கண்டவாறு கூறினார்.








