ஷா ஆலாம், ஆகஸ்ட்.11-
போதைப்பொருள் கடத்தியதாகத் தூக்குத் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்ட ஆடவர் ஒருவர், இன்று அந்த தண்டனையிலிருந்து தப்பினார்.
45 வயது ஷாஃப்ரி ஹம்ஸா என்ற அந்த நபருக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட போதைப்பொருள் கடத்தல் தொடர்புடைய இரு குற்றச்சாட்டுகளில் திருத்தம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு 8 ஆண்டு சிறையும், 10 பிரம்படித் தண்டனையும் விதிக்கப்பட்டது.
தூக்குத் தண்டனை விதிக்க வகை செய்யும் 1952 ஆம் ஆண்டு போதைப்பொருள் கடத்தல் சட்டத்தின் கீழ் அந்த நபருக்கு எதிரான குற்றச்சாட்டில் திருத்தம் செய்வதற்கு சட்டத்துறை அலவலகம் அனுமதி வழங்கியதாக பிராசிகியூஷன் தரப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து மரணத் தண்டனைக்கு பதிலாக, சிறைத் தண்டனையை விதிப்பதாக நீதிபதி ஜூலியா இப்ராஹிம் அறிவித்தார்.








