Oct 1, 2026
Thisaigal NewsYouTube

ஸ்டேரிங் பூட்டால் சரமாரித் தாக்குதல்: ஜோகூரில் இ-ஹெயிலிங் ஓட்டுநருக்கு நேர்ந்த பயங்கரம்!

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஸ்டேரிங் பூட்டால் சரமாரித் தாக்குதல்: ஜோகூரில் இ-ஹெயிலிங் ஓட்டுநருக்கு நேர்ந்த பயங்கரம்!

ஜோகூர் பாரு, டிசம்பர்.28-

ஜோகூர் பாரு, ஜாலான் லிங்காரான் டாலாமில் உள்ள பெட்ரோல் நிலையத்திற்கு அருகே ஏற்பட்ட சிறு விபத்துத் தவிர்ப்பு மோதலில், இ-ஹெயிலிங் ஓட்டுநர் ஒருவர் ஸ்டேரிங் பூட்டால் முகத்தில் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோல் நிலையத்திலிருந்து கார் திடீரென வெளியே வந்ததால் ஆத்திரமடைந்த 35 வயது நபர், தனது காரின் பின்புறத்திலிருந்து ஆயுதத்தை எடுத்து ஓட்டுநரைத் தாக்கும் 7 விநாடி காணொளிக் காட்சி இணையதளங்களில் தீயாய்ப் பரவி வருகிறது.

இந்தத் தாக்குதலில் 38 வயது ஓட்டுநரின் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ள நிலையில், புகாரைப் பெற்ற காவற்படை தாக்குதல் நடத்திய நபரை மின்னல் வேகத்தில் அதிரடியாகக் கைது செய்ததாக ஜோகூர் பாரு செலாத்தான் காவற்படைத் தலைவர் உதவி ஆணையர் ரவூப் செலாமாட் தெரிவித்தார். கைதான நபரிடம் போதைப் பொருள் பயன்பாடு அல்லது குற்றப் பின்னணி ஏதும் இல்லை எனத் தெரிவித்துள்ள ரவூப் செலாமாட், ஆயுதத்தால் காயப்படுத்துதல் சட்டப் பிரிவின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்றக் காவலில் எடுத்துள்ளனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →