May 4, 2026
Thisaigal NewsYouTube
மலேசியாவின் OPR வட்டி விகிதத்தில் மாற்றமில்லை
தற்போதைய செய்திகள்

மலேசியாவின் OPR வட்டி விகிதத்தில் மாற்றமில்லை

Share:

மலேசிய மத்திய வங்கியான பேங்க் நெகாரா மலேசியா, நாட்டின் OPR வட்டி விகிதத்தை 2.75 விழுக்காடாக தக்கவைக்க முடிவு செய்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றங்கள் மற்றும் உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியிலும், மலேசியாவின் உள்நாட்டுப் பொருளாதாரம் நிலைத்தன்மையுடன் இருப்பதை கருத்தில் கொண்டு பேங்க் நெகாரா மலேசியா, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பேங்க் நெகாரா மலேசியா வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போதைய 2.75 விழுக்காடு வட்டி விகிதமானது, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவாகவும், அதேவேளையில் கட்டுப்படுத்தப்பட்ட பணவீக்க சூழலுக்கு ஏற்றதாகவும் இருப்பதாகத் தெரிவித்துள்ளது. கடந்த 2025-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் மலேசியாவின் OPR வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related News