Jul 1, 2026
Thisaigal NewsYouTube
சண்டக்கான் தீ விபத்து: பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா RM1,500 நிவாரணம் - பிரதமர் அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

சண்டக்கான் தீ விபத்து: பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா RM1,500 நிவாரணம் - பிரதமர் அறிவிப்பு

Share:

சபா, சண்டக்கான், கம்பங் பஹாகியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் வீடுகளை இழந்த 300 குடும்பங்களுக்கு தலா 1,500 ரிங்கிட் உடனடி ரொக்க உதவி வழங்கப்படும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.

இன்று பாதிக்கப்பட்ட இடத்தைப் நேரில் பார்வையிட்ட பிரதமர், இந்த நிதி உதவி 'நட்மா மற்றும் பிரதமர் துறையின் கீழ் உள்ள ஒருங்கிணைப்புப் பிரிவின் மூலம் வழங்கப்படும் எனத் தெரிவித்தார். மேலும், இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட 454 மாணவர்களுக்குத் தலா 300 ரிங்கிட் பள்ளி உதவித் தொகையும் வழங்கப்படும்.

தவிர, தீ விபத்தில் அடையாள அட்டைகள் மற்றும் சான்றிதழ்களை இழந்தவர்களுக்கு, உள்துறை அமைச்சின் மூலம் புதிய ஆவணங்கள் கட்டணமின்றி இலவசமாக வழங்கப்படும் என்றும் பிரதமர் உறுதியளித்தார்.

Related News

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும்  சிகமாட்  நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை