வீட்டில் எரிவாயு களன் வெடித்ததில் கணவன், மனைவி கடும் காயங்களுக்கு ஆளாகினர். இச்சம்பவம் நேற்று இரவு 9.54 மணியளவில் ஜோகூர்பாரு, பாக்கார் பத்து, ஃப்லாட் டேசா மலாயு என்ற அடுக்குமாடி வீட்டில் நிகழ்ந்தது. தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்த லார்க்கின் தீயணைப்பு, மீட்புப்படை நிலையத்தை சேர்ந்த வீர்கள் காயமுற்ற கணவன், மனைவிக்கு மெர்ஸ்999 மருத்துவக்குழு மூலம் முதல் உதவி சிகிச்சை அளித்ததுடன், ஜோகூர்பாரு, சுல்தானா அமினா மருத்துவமனையில் சேர்க்க உதவினர். எரிவாயு களன் எவ்வாறு வெடித்தது என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருவதாக அதன் பேச்சாளர் தெரிவித்தார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது


