Jul 29, 2026
Thisaigal NewsYouTube
ஜொகூர், உலு திராம் போலீஸ் நிலையத்தின் மீதான தாக்குதலை நடத்திய ஆடவரின் குடும்ப உறுப்பினர்கள் மீது 9 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
தற்போதைய செய்திகள்

ஜொகூர், உலு திராம் போலீஸ் நிலையத்தின் மீதான தாக்குதலை நடத்திய ஆடவரின் குடும்ப உறுப்பினர்கள் மீது 9 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

Share:

ஜொகூர் பாரு, ஜூன் 19-

ஜொகூர், உலு திராம்-மிலுள்ள போலீஸ் நிலையத்தின் மீது கடந்த மே மாதம் 17ஆம் தேதி தாக்குதலை நடத்திய போது,சுட்டுவீழ்த்தப்பட்ட ஆடவரின் 5 குடும்ப உறுப்பினர்கள், இன்று ஜொகூர் பாரு-விலுள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

நீதிபதி சே வான் ஜைதி சே வான் இப்ராஹிம் முன்னிலையில், அந்த ஐவரின் மீது மொத்தம் 9 குற்றச்சாட்டுகள் தனித்தனியாக சுமத்தப்பட்டன.

சுட்டு வீழ்த்தப்பட்ட ஆடவரின் 62 வயது தந்தை ராடின் இம்ரான் ரடின் முகமது யாசின் மீது, ஜெமா இஸ்லாமியா தீவிரவாத கும்பலின் கருத்தியலை விதைத்தது, தீவிரவாத நடவடிக்கைகளை ஊக்குவித்தது உள்பட 4 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

அவரது மனைவியான சிங்கப்பூரைச் சேர்ந்த 58 வயது ரோஸ்னா ஜன்தன், சுட்டு வீழ்த்தப்பட்ட ராடின் லுக்மான் உள்பட அவரது 4 பிள்ளைகளுக்கும் தீவிரவாத சிந்தனையை அவர் விதித்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

மூத்த மகன் மீது இரு குற்றச்சாட்டுகளும் மனைவி மற்றும் இரு பெண் பிள்ளைகள் மீது தலா ஒரு குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டன.

கடந்த மே மாதம் 17ஆம் தேதி, அதிகாலை மணி 2.54 அளவில், உலு திராம் போலீஸ் நிலையத்தில் ராடின் லுக்மான் நடத்திய கொடூர தாக்குதலில் , கான்ஸ்டேபெல் பதவியை வகிக்கும் 22 வயதுஅஹ்மத் அஸ்ஸா ஃபஹ்மி அசார், 24 வயது முஹம்மது சயாபிக் அஹ்மத் தெரிவித்தார் ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.

மற்றொரு போலீஸ் உறுப்பினரான கார்போரல் பதவியை வகிக்கும் 38 வயது முகமது ஹசிஃப் ரோஸ்லன் என்பவர் தோள்பட்டை மற்றும் இடுப்பு பகுதியில் துப்பாக்கிச் சூட்டு காயங்களுக்கு இலக்கானார்.

Related News

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ  ரமணன்

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்

துப்பாக்கி முனையில் கடையில் கொள்ளை; சந்தேகநபரை போலீஸ் தீவிரமாக தேடுகிறது

துப்பாக்கி முனையில் கடையில் கொள்ளை; சந்தேகநபரை போலீஸ் தீவிரமாக தேடுகிறது