ஷா ஆலாம், செப்டம்ப்ர்.
எதிர்காலத்தில் மலேசியா நிறுவத் திட்டமிட்டுள்ள அணுசக்தி உலைகள் குறித்து மக்களிடம் வெளிப்படையாக இருக்க வேண்டுமென முன்னாள் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ வலியுறுத்தியுள்ளார்.
அடுத்த 10 ஆண்டுகளில் மலேசியா அணுசக்தி ஆற்றலை நிறுவக்கூடும் என துணைப் பிரதமர் ஃபடில்லா யூசோஃப் வெளியிட்டிருந்த அறிக்கையை மேற்கோள் காட்டிய சார்ல்ஸ், மலேசிய மக்கள் அதனை அறிந்து கொள்ள முழு உரிமை உண்டு எனக் குறிப்பிட்டுள்ளார்.
அணுசக்தி உலைகள் அமைக்கப்படவிருக்கும் பகுதிகள், கழிவுகள் வெளியேற்றப்படும் இடங்கள் ஆகியவை குறித்து அச்சுற்று வட்டாரப் பகுதி மக்களிடம் கலந்தாலோசிக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.








