Mar 30, 2026
Thisaigal NewsYouTube
போராடப்போவதாக கமலா சூளுரை
தற்போதைய செய்திகள்

போராடப்போவதாக கமலா சூளுரை

Share:

வாஷிங்டன், நவ.7-


அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டொனல்ட் டிரம்ப்பிடம் தோல்விக்கண்ட ஜனநாயகக் கட்சி வேட்பாளரும் துணை அதிபருமான கமலா ஹாரிஸ், தோல்வியை ஒப்புக்கொண்ட நிலையில் தமது கொள்கைகளை முன்னிறுத்தி தொடர்ந்து போராட இருப்பதாக சூளுரைத்துள்ளார்.

வாஷிங்டனில் உள்ள ஹவர்ட் பல்கலைக்கழகத்தில் கூடிய தமது ஆதரவாளர்கள் முன்னிலையில் கமலா ஹாரிஸ் எழுச்சிமிக்க உரையை நிகழ்த்திய போது, இந்த உறுதிப்பாட்டை வழங்கினார்.

கமலா ஹாரிஸின் இந்த எழுச்சிமிக்க உரையைக்கேட்டு, அவரின் ஆதரவாளர்கள் பலர் கண் கலங்கினர். கமலா ஹாரிஸின் உணர்ச்சிமிகுந்த உரையாக அது இருந்த போதிலும் மெல்லிய புன்னகைக்கு மத்தியில் அவரது குரல் அவ்வப்போது தழுதழுத்தது.

அமெரிக்கா மக்களுக்கு மட்டுமின்றி பெண்ணுரிமைக்காகத் தொடர்ந்து போராடப் போவதாகவும் அவர் உறுதி அளித்தார். துப்பாகி வன்முறைக்குக் எதிராக குரல் கொடுக்கும் தனது போக்கை நிறுத்திக்கொள்ளப்போவதில்லை என்றும் அவர் சூளுரைத்தார்

Related News