பேரா, சுங்கை சிப்புட் வடக்கு, சுங்கை ரேலா தோட்டத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா, நாளை மறுநாள் ஏப்ரல் 23 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை மணி 10.00 முதல் 11.00 மணிக்குள் வெகு விமரிசையாக நடைபெறவிருக்கிறது.
சிம்மோர், கந்தான் கல்லுமலை ஸ்ரீ மகா காளியம்மன் ஆலய தலைமை குருக்கள், சிவ ஸ்ரீ ஜெ. மனோகர் குருக்கள் தலைமையில் அன்னை மகா மாரியம்மனுக்கும் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் நடைபெறும் இந்த மகா கும்பாபிஷேகத்திற்கு சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் சு. கேசவன், மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.எ. விக்னேஸ்வரன் மற்றும் பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் சிவநேசன் அச்சலிங்கம் ஆகியோர் சிறப்பு வருகை புரிவர்.
மிகச் சிறப்பாக நடைபெறவிருக்கும் இந்த மகா கும்பாபிஷேக விழாவில் பக்கோடி பெருமக்கள் அனைவரும் கலந்து கொண்டு அன்னையின் அருட்கடாட்சம் பெற்று உய்யுமாறு ஆலய நிர்வாகத்தினர் கேட்டுக்கொள்கின்றனர்.

Related News

விசா இல்லா வசதியை வேலைக்காக பயன்படுத்த வேண்டாம் – இந்தியப் பிரஜைகளுக்கு எச்சரிக்கை

25-வது மாடியிலிருந்து விழுந்த கட்டுமானத் தொழிலாளி உயிரிழப்பு

ருக்குன் நெகாராவைக் கேலி செய்ததாக நாடகக் கலைஞர்கள் மீது விசாரணை

நாடு முழுவதும் பெர்கேசோ அதிரடி சோதனை – 159 இடங்களில் சோதனை; 14 நோட்டீஸ்கள்

வீட்டுக் காவலுக்கு மத்தியில் நஜிப்புக்கு புதிய சோதனை: ஜனவரி 7-அம் தேதி வெளியாகப் போகும் அப்பீல் நீதிமன்ற தீர்ப்பு


