கோலாலம்பூர், நவம்பர்.16-
தேசிய மோசடிப் பதிலளிப்பு மையத்தின் 997 அவசர உதவி எண்ணில் நாளை திங்கட்கிழமை, காலை 9 மணி முதல் காலை 11 மணி வரை தொழில்நுட்பக் கோளாறு காரணமாகச் சேவைத் துண்டிப்பு ஏற்படவுள்ளதாக புக்கிட் அமான் வர்த்தகக் குற்றப் புலனாய்வுத் துறை அறிவித்துள்ளது.
இக்காலக்கட்டத்தில் இணையவழி நிதி மோசடிப் புகார்களை அளிக்க விரும்புவோர், நேரடியாகத் தங்களின் வங்கிகள் அல்லது தொடர்புடைய நிதி நிறுவனங்களைத் தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், பாதிக்கப்பட்டவர்கள் அருகிலுள்ள காவல் நிலையத்திலும் சம்பவம் குறித்துப் புகார் அளிக்கலாம். அவசர காலத் தொடர்பு எண்கள் அல்லது நிதி நிறுவனங்களின் புகார் பட்டியலை பேங்க் நெகாரா அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அணுகலாம் என்றும் வர்த்தகக் குற்றப் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.








