செர்டாங், டிசம்பர்.30-
கடந்த மாதம் பந்திங்கில், ஆடவர் ஒருவர் போலீசாரால் சித்ரவதை செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட வழக்கில், விசாரணை ஆவணங்கள் அனைத்தும் சட்டத்துறை அலுவலகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
கடந்த வாரம் சமர்ப்பிக்கப்பட்ட இந்த விசாரணை ஆவணங்கள் குறித்து, சட்டத்துறை அலுவலகத்தின் உத்தரவிற்காக காத்திருப்பதாக, செர்டாங் மாவட்ட போலீஸ் தலைவர் முஹமட் ஃபாரிட் அஹ்மாட் தெரிவித்துள்ளார்.
கடந்த நவம்பர் 18-ஆம் தேதி, வீடு ஒன்றில் ஆதாரங்களைக் கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்ட போலீசார், அங்கிருந்த 20 வயது ஆடவரைக் கடுமையாகத் தாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இவ்வழக்கு விசாரணையானது யாருடைய தலையீடும் இன்றி வெளிப்படையாக நடக்கும் என முஹமட் ஃபாரிட் அஹ்மாட் உறுதியளித்துள்ளார்.








