நாட்டின் பல்லின மக்களின் ஒற்றுமையை நிலைக்குலைக்கும் வகையில் வலைத்தளங்களில் இனத் துவேசம் செய்து வந்து கொண்டிருந்த ஆடவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆறு நாட்களாக தேடி வரப்பட்ட அந்த ஆடவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என போலீஸ் படையில் தொலைதொடர்பு விசாரணை பிரிவின் தலைவர் துணை கமிஸ்னர் எ. ஸ்கன்டாகுரு தெரிவித்தார்.
கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் நாள் போலீசார் 46 வயது நிரம்பிய ரொஸ்லிஸால் ரஸாலி என்ற ஆடவரை தேடி வருவதாக அறிவிப்பு செய்திருந்தனர். அதன் நீட்சியாக போலீசார் நேற்று அந்த ஆடவரி கைது செய்ததுடன் அவரின் கைதொலைபேசி மற்றும் மடிக்கணினியை பறிமுதல் செய்துள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.








