Dec 3, 2025
Thisaigal NewsYouTube
நீதி விசாரணையைக் கோருகின்றனர் திருநங்கையான சஞ்சனாவின் குடும்பத்தினர்
தற்போதைய செய்திகள்

நீதி விசாரணையைக் கோருகின்றனர் திருநங்கையான சஞ்சனாவின் குடும்பத்தினர்

Share:

கிள்ளான், பாயூ வில்லாவில் உள்ள தனது அடுக்குமாடி வீட்டில் கடந்த ஜுன் 6 ஆம் தேதி தூக்கில் தொங்கியதாக கூறப்படும் ஒரு திருநங்கையான 24 வயது சஞ்சனாவின் மரணம் தொடர்பில் தங்களுக்கு நீதி வேண்டும் என்று கோரி, கோலாலம்பூர் செந்தூல் போலீஸ் நிலையத்தில் அவரின் குடும்பத்தினர் புகார் செய்துள்ளனர்.

சஞ்சாய் காந்தி என்ற இயற்பெயர் கொண்ட தங்கள் மகன் இறப்பில் குற்றத்தன்மை இருப்பதாகவும், அவர் தூக்கில் தொங்கவில்லை என்றும் அவர் அடித்து துன்புறுத்தப்பட்டு, தூக்கில் தொங்கவிடப்பட்டு இருக்கலாம் என்று தாங்கள் சந்தேகிப்பதாக சஞ்சனா என்ற சஞ்சாயின் தந்தை காந்தி நேற்று திங்கட்கிழமை செந்தூல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

தங்கள் மகனுடன் ஒரே வீட்டில் தங்கியிருந்ததாக கூறப்படும் கங்கா என்ற ஆடவரை போலீசார் விசாரணை செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். காரணம், தங்கள் மகன் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட நிலையில் அவரின் உடலில் பலத்த காயங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக காந்தி குறிப்பிட்டார்.

ஸ்ரீரமேஷ் தலைமையிலான மலேசிய தமிழர் முன்னேற்றக்கழகத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள சஞ்னா விவகாரத்தில் அவரின் மரணத்தில் புதைந்து கிடக்கும் உண்மைகள் வெளிகொணரப்பட வேண்டும் என்று மெகுழுவர்த்திகள் ஏந்திய நிலையில் செந்தூல் போலீஸ் தலைமையகத்தின் அவரின் குடும்பத்தினரும் நண்பர்களும் நீதி கேட்டு, போராட்டம் நடத்தத் தொடங்கியுள்ளனர்.

இவ்விவகாரம் தற்கொலை என்று வகைப்படுத்தியுள்ள கிள்ளான் மாவட்ட போலீஸ் நிலையத்தின் சில அதிகாரிகள் விசாரணை செய்யப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related News