சபா மாநிலத்தில் கலாச்சார மண்டபம் மற்றும் காட்சியகம் அமைப்பதற்காக வழங்கப்பட்ட 2 மில்லியன் ரிங்கிட் அரசாங்க ஒதுக்கீட்டைப் பெற தனது பதவியை தவறாக பயன்படுத்தியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை, சபாவைச் சேர்ந்த அரசு சாரா அமைப்பு ஒன்றின் தலைவர் மாக்கின்சோஸ் நவாய் மறுத்துள்ளார்.
சபா யுனைடெட் ருங்குச் அமைப்பு என்ற அந்த அமைப்பின் தலைவரான 67 வயது மாக்கின்சோஸ் நவாய், இன்று கோத்தா கினபாலு செசன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதி ஆன்டி ராசலியா ஏ தாடி முன்னிலையில் ஆஜராகி, குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்.
கடந்த 2022-ஆம் ஆண்டு சபா நிதியமைச்சிடமிருந்து கலாச்சார மண்டப கட்டுமானத்திற்காக 2 மில்லியன் நிதி ஒதுக்கீட்டைப் பெற, தனது பதவியை தவறாக பயன்படுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.








