Oct 16, 2026
Thisaigal NewsYouTube

13 விழுக்காட்டினர் கடனை முழுமையாக செலுத்தியுள்ளனர்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
13 விழுக்காட்டினர் கடனை முழுமையாக செலுத்தியுள்ளனர்

டிச.4-

நிதி நிர்வாகம், ஆலோசனை நிஏறுவனமான AKPK இன் 4 இலட்சத்து 77 ஆயிரத்து 571 கடனாளிகளில் 13 விழுக்காட்டினர் 3.2 பில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான கடனை முழுமையாக செலுத்தியுள்ளனர் என இரண்டாவது நிதி அமைச்சர் டத்தோ ஸ்ரீ அமிர் ஹம்சா அசிசன் தகவல் வெளியிட்டுள்ளார்.


கடன் வாங்குபவர்கள் கடன் மறுசீரமைப்புத் திட்டத்தின் மூலம் உதவி பெற்றுள்ளனர். அவர்கள் ஏற்கனவே இருக்கும் தங்களின் கடன்களை மறுசீரமைக்கவும், தொடர்ந்து கடனைத் திருப்பிச் செலுத்தவும் உதவியது.


மேலும், 51 விழுக்காடு பங்கேற்பாளர்கள் இன்னும் தீவிரமாக கடனைத் திருப்பிச் செலுத்திக் கொண்டு இருக்கிறார்கள். கூடுதலாக, 5 விழுக்காட்டினர் AKPK இன் உதவி இல்லாமல் தங்கள் கடனை செலுத்தும் திறன் கொண்டதால் இந்த திட்டத்தில் இருந்து வெளியேறி இருப்பதாகவும் அமிர் ஹம்சா தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →