கெடா, சிக் கில் ஜெனெரி மற்றும் குபாங் ஆகிய இரு இடங்களுக்கு செல்வதற்கு நேற்று வெள்ளிக்கிழமை தாம் பயன்படுத்திய ஹெலிகாப்டர் பிரதமர் துறைக்கு சொந்தமானது என்பதை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஒப்புக்கொண்டார். சிக் கில் உள்ள ஃபெல்டா தெலோய் திமுர் என்ற இடத்தில் பிரதமரை ஏற்றி வந்த ஹெலிகாப்டர் தரையிறங்கிய போது , மேலும் இரண்டு ஹெலிகாப்டர்கள் அவ்விடத்தில் தரையிறங்கின. இவ்விவகாரம் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டு வருவதைத் தொடர்ந்து தாம் பயன்படுத்திய அந்த ஹெலிகாப்டர் அரசாங்கத்திற்கு சொந்தமானதாகும் என்று அன்வார் விளக்கம் அளித்துள்ளார். டான்ஸ்ரீ முகைதீன் யாசின், பிரதமராக இருந்த காலத்தில் அரசாங்கத் தலைவர்கள் பயன்படுத்துவதற்கு அகஸ்டா வெஸ்ட்லேண்ட் AW 139 என்ற அந்த ஹெலிகாப்டர் கொள்முதல் செய்யப்பட்டதாக கூறப்படுவது தொடர்பில் இந்த விமர்சனங்கள் எழுந்துள்ளன.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை


