இன்று மாலை 4.30 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்திலிருந்து மனவளர்ச்சி குன்றிய 40 வயது மதிக்கத்தக்க ஆடவரை அவரின் அண்டை அயலார் ஃபிக்ரி இப்ராஹிம் காப்பாற்றி உள்ளார்.
கோத்தா பாரு கம்போங் புலாவ் மலாக்காவில் அமைந்துள்ள வீட்டொன்றின் சமையல் அறையில் தீ பிடித்து எரிந்துக் கொண்டிருந்ததைப் பார்த்த அண்டைஅயலார் ஃபிக்ரி , மனவளர்ச்சி குன்றிய ஆடவரைக் காப்பாற்றும் எண்ணம் கொண்டும் வீட்டின் கதவு கம்பியை உடைத்துள்ளனர் என கோத்தா பாரு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி நிலையத்தின் தலைவர் சுகேரி ஷஃபி தெரிவித்தார்.
உயிர்சேதம் ஏதும் ஏற்படாது, தீயணைப்பு வீரர்கள மாலை 6.40க்கு தீயைக் கட்டுப்பாட்டுகுள் கொண்டு வந்ததுடன், தீ ஏற்படுவதற்கான காரணத்தையும், செலவீனங்களையும் ஆராய்ந்து வருவதாக கூறினார்.








