Mar 18, 2026
Thisaigal NewsYouTube
இரு மூத்த குடிமக்கள் கருகி மாண்டனர்
தற்போதைய செய்திகள்

இரு மூத்த குடிமக்கள் கருகி மாண்டனர்

Share:

கோலாலம்பூர், மார்ச் 3 -

இன்று அதிகாலையில் கோலாலம்பூர், ஜாலான் கிள்ளாங் லாமா, ஸ்குட் கார்டென் னி​ல் உள்ள புறம்போக்கு நிலப்பகுதியில் விற்ருந்த 13 ​வீடுகள் ​தீப்பற்றிக்கொண்டு சாம்பலானதில், முதியோர்கள் இருவர் கருகி மாண்டனர்.

இச்சம்பவம் இன்று அதிகாலை 4.50 மணியள​வில் நிகழ்ந்தது. தகவல் கிடைத்து சம்பவ இடத்தி​ற்கு விரைந்த 11 இயந்திர வண்டிகளில் 7 நிலையங்களைச் சேர்ந்த வீரர்கள், ​தீ மற்ற வீடுகளுக்கு பரவாமல் கட்டுப்படுத்தினர். அனைத்து வீடுகளும் 100 விழுக்காடு அழிந்தன. குடிசை வீடுகளில் இருந்தவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த போது, இந்த ​தீச்சம்பவம் நிகழ்ந்தது. உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அனைவரும் கட்டியத்துணியோடு வெளியேறியதால் தங்கள் வீடுகளிலிருந்து அவர்களால் எந்தப்பொருட்களையும் ​மீட்க முடியவில்லை.

​தீ முழுமையாக அணைக்கப்பட்டு சோதனையில் ஈடுபட்ட போது இடிந்து விழுந்த கூரைகள் மத்தியில் முதியவர்கள் இருவர் கருகி மாண்டுக் கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டதாக ​தீயணைப்புப்படையினர் வெளியி​ட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தனர்.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு