Dec 2, 2025
Thisaigal NewsYouTube
ஜோஸ்லின் சியா வை போலீசார் தேடி வருகின்றனர்
தற்போதைய செய்திகள்

ஜோஸ்லின் சியா வை போலீசார் தேடி வருகின்றனர்

Share:

200 க்கும் மேற்பட்டோரை பலிகொண்ட மலேசிய ஏர்லைன்சுக்கு சொந்தமான எம்.எச்.370 விமான பேரிடர் தொடர்பில் நகைச்சுவை என்ற பெயரில் கிண்டல் செய்து இருக்கும் பெண் நகைச்சுவையாளர் ஜோஸ்லின் சியா பற்றிய விவரங்களை சேகரிக்க போலீசார் அனைத்துலக போலீசாரின் உதவியை நாடியுள்ளனர்.

இண்டர்போல் போலீஸ் மூலம் ஜோஸ்லின் சியா இருக்கும் இடத்தை அறிவதற்கு போலீசார் அந்த அனைத்துலக போலீஸ் குழுவின் உதவியை நாடியுள்ளதாக போலீஸ் படைத் தலைவர் டான் ஸ்ரீ அக்ரில் சானி அப்துல்லா சானி தெரிவித்துள்ளார். இது தொடர்பான விண்ணப்பம் நாளை புதன்கிழமை அதிகாரப்பூர்வமாக சமர்ப்பிக்கப்படும் என்று ஐஜிபி குறிப்பிட்டுள்ளார்.

Related News