Dec 4, 2025
Thisaigal NewsYouTube
அரசியல் பிரதிநிதிகள் எங்கேப் போனார்கள்
தற்போதைய செய்திகள்

அரசியல் பிரதிநிதிகள் எங்கேப் போனார்கள்

Share:

புதிய அரசாங்கம் அமைந்தால் உள்ளூர் இந்திய வியாபாரிகளின் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கையில்தான், மழையையும், வெயிலையும் பொருட்படுத்தாமல், கடந்த பொதுத் தேரத்லில் பல மணி நேரம் கால் கடுக்க நின்று வாக்காளித்தோம். ஆனால், புதிய அரசாங்கம் அமைந்த பின்னரும் இந்திய வியாபரிகளின் பிரச்னையை அரசியலவாதிகள் அறவே கண்டு கொள்ளாதது பெரும் ஏமாற்றம் அளிக்கிறது என்கிறார் மலேசிய இந்திய வியாபாரிகளின் குரலாக ஒலிக்கம் திருமதி கலா பாலமுரளி.

அந்நிய வியாபாரிகளின் படையெடுப்பால் பாதிக்கப்பட்டுள்ள உள்ளூர் வியாபாரிகளின் பிரச்னையை நாடாளுமன்றத்தில் பேசுவார்கள், தீர்வு காண்பார்கள் என்ற நம்பிக்கையில்தான் பொதுத் தேர்தலில் மக்களின் பிரதிநிதிகளாக அரசியல்வாதிகளை தேர்வு செய்தோம். ஆனால், எந்த அரசியல்வாதிகள் தீர்வு காண்பார்கள் என்று நினைத்து வாக்களித்தோமா அந்த அரசியல்வாதிகள் எங்கள் பிரச்னையை அறவே கண்டு கொள்ளாதது, அதைப் பற்றி பேசாதது, பெரும் ஏமாற்றம் அளிக்கிறது என்று கலா பாலமுரளி தமது உள்ள குமுறலை வெளியிட்டார்.

கோலாலம்பூர் மாநகரம் போன்ற பகுதிகளில் அந்நிய வியாபாரிகள் 23 வகையான வியாபாரங்களை செய்வதற்கு 2019 ஆம் ஆண்டு அரசாங்கம் தடை விதித்து இருந்தது. அந்த தடை உத்தரவு என்னவானது,? எங்கே தவறு நடந்து கொண்டு இருக்கிறது, எங்களுக்கு ஏற்பட்டுள்ள வியாபாரப் பாதிப்பு ஒரு தொடர் கதைதானா?


இதற்குத்தான் அரசியல்வாதிகளை மக்கள் பிரநிதியாக தேர்ந்தெடுத்தோமா? என்று 20 ஆண்டுகளுக்கு மேலாக வர்த்தகத் துறையில இருக்கும் கலா பாலமுரளி கேள்வி எழுப்பினார். .

Related News