கோலாலம்பூர், செப்டம்பர்.10-
ஹமாஸ் தலைவர்களின் அலுவலகம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, Legtaifiya-வில் நடந்த குண்டு வெடிப்பில் மலேசியர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை என கத்தாரிலுள்ள மலேசியத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.
அதே வேளையில், கத்தாரிலுள்ள மலேசியர்கள் விழிப்புடன் இருக்குமாறும், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்றும் அங்குள்ள மலேசியத் தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது.
கத்தார் அதிகாரிகளால் வெளியிடப்படும் அதிகாரப்பூர்வ தகவல்கள் மூலம் தற்போதைய நிலவரத்தை அறிந்து கொள்ளுமாறும் நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.








